பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டே தமிழில் பாரதி, அழகி, பாபா, தூள், வேட்டைக்காரன், அழகிய தமிழ் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் அதுமட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே இதய பாதிப்பு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவர் சதாராவில் உள்ள பிரதீபா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு இதய குழாய்களில் ஒன்று 90% அடைக்கப்பட்டு விட்டதாகவும், அதன் காரணமாக அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.