பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தற்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது விஜய் அஜித்திற்கு அடுத்தபடியாக மாஸ் ஓப்பனிங் என்ற பெயரை பெற்றுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். முழுக்க முழுக்க தனது முயற்சியாலும், திறமையாலும் மட்டுமே இந்த இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சிவா.
இவர் முதல் முதலில் ஸ்டார் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தை வாங்கினார் அதோடு விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் VJ- வாக தொகுத்து வழங்கினார் பின்னர் இவர் திறமையைக் கண்டு இயக்குனர் பாண்டியராஜ் மெரினா படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளித்தார். பிப்ரவரி 3 2012 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது ஓரளவுக்கு வெற்றி அளித்தது இப்படம்.இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு 20,000 சம்பளம் அளிக்கப்பட்டது.
இப்படத்தைப் பார்த்த இயக்குனர் எழில் இயக்கிய மனம் கொத்திப் பறவையில் கதாநாயகனாக நடிக்க வைத்தார் சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் சம்பளம் எவ்வளவு என்று சொல்லவில்லை இப்படம் திரையரங்கில் வெளிவந்தது வெற்றிவாய்ப்பை பார்த்து முடிவு செய்து சம்பளம் தருகிறேன் என்று இயக்குனர் எழில் சொன்னார் இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனுஷ் நடித்துக் கொண்டிருந்த 3 என்ற படத்தில் துணை கதாநாயகனாக சப்போர்ட்டிங் ஆக்டர் ஆக நடிக்க வைத்த தனுஷ் இப்படத்தில் அவருக்கு குறைவான சம்பளம் 50,000 தந்தார் . அடுத்த படத்தில் உன்னை வைத்து கதாநாயகனாக படம் எடுக்கிறேன் என்று தனுஷ் கூறினார். சிவகார்த்திகேயனுக்கு மிக மகிழ்ச்சி
இயக்குனர் தனுஷ் சொன்னதுபோல் எதிர்நீச்சல் என்ற படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார் இப்படத்தில் இவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது இப்படம் மிகப்பெரிய வெற்றி அளித்தது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவர் சேர்ந்து மிக அருமையான நகைச்சுவை கலாட்டா படத்தை அழைத்தார்கள் . இப்படம் 10 கோடிக்கு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் திரையரங்கங்களில் வெளிவந்து ஒரு வாரத்தில் 30 கோடி வசூலை தொட்டது இதைக்கண்ட தயாரிப்பாளர் பி.மதன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கார் அன்பளிப்பாக அளித்தார் இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தது.
பின் சிவகார்த்திகேயன் சம்பளம் லட்சத்திலிருந்து கோடியாக மாறியது இவர் நடித்த ரெமோ படம் வெளிவந்த போது இவருக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பின் இப்பொழுது 15 கோடியில் இருந்து 20 கோடி வரை தர தயாரிப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்