#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் சேதுபதிக்காக சிவகார்த்திகேயன் செய்த காரியம்! குஷியான ரசிகர்கள்!
தற்போதைய தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் 25 வது திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தினை சிறப்பிக்கும் விதமாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.
சாதாரண துணை நடிகராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த விஜய் சேதுபதி தற்போது ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு படங்கள் வரை நடிக்கிறார். தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
இந்நிலையில் இவரது 25 படமான சீதக்காதி அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஓன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பட்டு செய்திருந்தது. அதில், விஜய் சேதுபதி ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
இதனையடுத்து இருவரும் இணைந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.