#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சூரி நடித்த சன் டிவி நாடகம் எது தெரியுமா? அட இந்த நாடகமா?
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் வரும் பரோட்டா காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் சூரி. இவரை பரோட்டா சூரி என்றுகூட பலர் அழைத்துவருகின்றனர். வடிவேலு இல்லாத தமிழ் சினிமாவை தனக்கான அடையாளமாக மாற்றிக்கொண்டார் நடிகர் சூரி.
விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முனனின் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் பரோட்டா சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் பிரபலமாகி இருந்தாலும் இந்த படத்திற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதில் எதிலும் இவர் பிரபலமாகவில்லை.
இந்நிலையில் நடிகர் சூரி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பிரபல சீரியலில் நடித்துள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் நடிகர் சூரி நடித்துள்ளார். நாடகத்தில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவ் நடித்திருப்பார். அதில் பைக் மெக்கானிக் கடையில் சஞ்சீவுக்கு உதவியாளராக நடித்திருப்பார் நடிகர் சூரி அவர்கள்.