#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்பத்துடன் தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர்! பின் நடந்தது என்ன??
சென்னை திநகர் பாண்டி பஜார் பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றது. அங்கு மூன்று தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் ஜவுளி கடை மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு ஜவுளி கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தால் கடையில் உள்ள பொருள்கள் பெரும் சேதமடைந்துள்ளனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தின் போது பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீ தனது குடும்பத்துடன் அந்த வணிக வளாகத்திற்குள் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தீ விபத்து ஏற்பட்டபோது வணிக வளாகத்தில் நான் குடும்பத்துடன் சிக்கிக்கொண்டேன். நாங்கள் 70 பேர் மூன்றாவது தளத்தில் இருந்தோம். அப்பொழுது தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு எங்கள் அனைவரையும் பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். அவர்களுக்கு ரொம்ப நன்றி என கூறியுள்ளார்.