#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா! வைரல் புகைப்படம்...
நடிகை ஸ்ரீதிவ்யாவின் கியூட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து இவர் காக்கி சட்டை, பென்சில், மருது, வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் அம்மணி.
தற்போது புதுமுக நடிகைகளின் வரவால் அம்மணிக்கு சரியான படவாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள இவர், விட்ட மார்க்கெட்டை மீண்டும் புடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கில் அவ்வப்போது தனது புது புது புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல், வெள்ளை நிற உடையில் தேவதைபோல் இருக்கும் புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.