#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடுத்த அதிரடி.. அரசியலில் குதிக்கப்போகும் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி... எந்த கட்சியில் தெரியுமா?..!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி.
இவரின் மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து தனியே வசித்து வருகிறார்கள். தம்பதிகளுக்கு மகள் இருக்கின்றார். அவர் தாயுடன் வசித்து வருகிறார்.
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி இருந்த நித்யா, தான் பாஜகவில் விரைவில் இணைய இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள தாடி பாலாஜி, அதுகுறித்து பேசியுள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசுகையில், "நான் அரசியலுக்கு விரைவில் வருகிறேன். அது உறுதி.
எந்த கட்சி எனக்கு அங்கீகாரம் தருகிறதோ, அந்த கட்சியில் இணைந்து நான் பணியாற்றுவேன். நானாக எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன். என்னை அக்கட்சி அழைத்தாள் மட்டுமே போவேன்.
திமுக கட்சியில் பெண் கவுன்சிலர்கள் அதிக என்றாலும், அவர்களை பணிசெய்ய விடாமல் கணவர்கள் செயல்படுகிறார்கள். பெண் கவுன்சிலர்கள் கணவர்கள் கவுன்சிலராக உள்ள வருகிறார்கள்.
அவ்வாறு நான் செயல்படமாட்டேன். ஒருவேளை அது குறித்து புகார் எழுந்து உண்மை நிரூபணமானால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யலாம்" என தெரிவித்துள்ளார்.