பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜயகாந்த் கைவிடமாட்டார்.! நம்பிக்கையோடு தலைவாசல் விஜய் எடுத்த பயங்கர ரிஸ்க்!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 28-12-23 காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்துடன் பல படங்களில் நடித்த, அவரது நீண்ட கால நண்பரான தலைவாசல் விஜய், விஜயகாந்தின் மரணம் குறித்து வேதனையுடன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, கேப்டனை மறக்கவே முடியாது. 20 வருட நட்பு. எப்போது பேசினாலும் முதல் நாள் பேசியதை போலவே இருக்கும். 8 படங்களுக்கு மேல் நாங்கள் இருவரும் நடித்துள்ளோம். அப்பொழுதெல்லாம் கேரவன் கிடையாது. அவரோடு அமர்ந்து மனம் விட்டுப் பேசிக்கொண்டிருப்போம். படத்தில் ஒரு சீனில் விஜயகாந்த் எனது கையை வெட்டுவது போல் காட்சி இருந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பிற்கு டம்மி வீச்சருவாள் கொண்டு வர மறந்த நிலையில், உண்மையான வீச்சருவாளை வைத்து படத்தை எடுக்க விஜயகாந்த் யோசனை கூறியுள்ளார். மேலும் அப்பொழுது அவர் என்னிடம், என் மேல் நம்பிக்கை உள்ளதா? நான் இந்த அரிவாளை வைத்து வெட்டவா? என கேட்டார். நானும் நமது கைக்கு ஏதாவது நடந்தாலும் கண்டிப்பாக விஜயகாந்த் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் அதற்கு சம்மதம் கூறினேன். பின்னர் ஒரே ஷாட்டில் அந்த காட்சியை மிகவும் சிறப்பாக விஜயகாந்த் நடித்தார்.
நட்பில் மாற்றமே இல்லாத மனிதர். தான் சாப்பிடும் உணவு அனைவருக்குமே கிடைக்கிறதா என கண்காணித்துக் கொண்டே இருப்பார். அவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரை என்றைக்கு வேண்டுமானாலும் சந்திக்கலாம் என இருந்தேன். ஆனால் இன்று அவர் இறந்து விட்டார். தாங்க முடியவில்லை. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார்