பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜயின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!
துப்பாக்கி, கத்தி திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை இயக்குகிறார் இயக்குனர் முருகதாஸ். சர்க்கார் திரைப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட இருப்பதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைரவா திரைப்படத்திற்கு அடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் சர்க்கார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராதா ரவி நடித்துள்ளார். சர்க்கார் திரைப்படம் பற்றி ராதாரவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
விஜய்யால் தற்போது காதலுக்கு மரியாதை போன்ற திரைப்டங்களில் நடிக்க முடியாது. ஏனென்றால் அவர் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு வட்டத்திற்குள் சென்றுவிட்டார். எனவே அவரைவைத்து இயக்கும் இயக்குனர்கள் சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்திற்குள்தான் கதைகளை தயார் செய்கின்றனர்.
zoro என்ற சூப்பர் மேன் போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் விஜய் “சர்கார்” படத்தில் நடித்துள்ளார். எப்படி zoro ஒரு சூப்பர் மேனாகவும் மக்களின் பிரதிநிதியாகவும் இருந்தாரோ அதே போல தான் “சர்கார்” படத்தில் நடிகர் விஜய் இருப்பார். அந்த அளவிற்கு தற்போது நான் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார் நடிகர் ராதாரவி.