பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜய் ஆண்டனியின் கொலை திரைப்பட அசத்தல் டிரைலர் இதோ.. பயங்கர கொலையின் துப்பு கிடைக்குமா?..!
பாலாஜி குமார் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌதாரி, கிஷோர் குமார், முரளி ஷர்மா, ஜான் விஜய், ராதிகா உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கொலை.
ஜூலை 21ம் தேதி கொலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டீசர் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், படத்தின் அசத்தல் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதனை வைத்து பார்க்கையில், படம் கொலை தொடர்பான மர்மத்தை கண்டறியும் கோணத்தில், பல திகில் காட்சிகளுடன் எடுக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவருகிறது.