#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இயக்குனர் அட்லீயா? ஐயோ வேண்டவே வேண்டாம் - தெறித்து ஓடும் நடிகர் விஜய்!
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ , இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர், ராஜா ராணி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து முன்னை இயக்குனர்களில் ஒருவராக வளம் வர தொடங்கினர். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும், அட்லீ மீது தயாரிப்பாளர்களுக்கு ஒருவித கோவம் உள்ளது. ஏனெனில் படம் ஆரம்பத்திற்கு முன் ஒரு பட்ஜெட், படம் முடிக்கும்போது ஒரு பட்ஜெட் என இழுத்துக்கொண்டே போய் விடுவார். அவர் ஷங்கரின் உதவியாளர் என்பதை இதன் மூலம் அவ்வப்போது நிரூபித்து விடுவார்.
மேலும், தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணியில், விஜய்யின் அடுத்த படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்தன.இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என விஜய் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே வேற சில படங்களின் தழுவல் என சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், அதிருப்தி அடைந்த நடிகர் விஜய், இனிமேல் அட்லி இயக்கத்தில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாகவும், ஆகையால் விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்க வாய்ப்பே இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அட்லீ, குறித்த நேரத்தில் குறித்த பட்ஜெட்டில் படத்தை எடுக்க மாட்டார் என்பது அவர் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தெரிய வந்தது.
இந்நிலையில், அவர் இயக்கும் படத்தை தயாரிப்பதில்லை என்று பல தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் அடுத்த படத்தை, இயக்குனர் மோகன்ராஜா இயக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.