பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இதுதான் நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய முதல் சம்பளமா? எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் வந்துவிட்டார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. தற்போது இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான சீதக்காதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால், சீதக்காதி திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. தற்போது சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
தற்போது படங்களில் நடிப்பதை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்கவந்து பலவருடங்கள் ஆகிவிட்டது. இவர் முதலில் நடித்தது சிறு சிறு வேடங்களில்தான். ஒரு துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார்.
இந்நிலையில் இவர் தொகுத்து வழங்கும் சன் டிவி நிகழ்ச்சியில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அதில் ஒரு ரசிகர், நீங்கள் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என கேட்க, அதற்கு படிப்பு முடிந்து வேலைக்கும் போய் முதன்முதலாக தான் 3500 ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறியுள்ளார்.