பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் விஜயின் முக்கியமான டாப் ஐந்து தோல்வி படங்கள் எவை எவைனு தெரியுமா?
நடிகர் விஜய் என்றாலே மாஸ்தான். தற்போது அவர் நடிப்பில் சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. முழுக்க முழுக்க அரசியலை தழுவியே இந்த திரைப்படம் அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் டீசர் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இயக்குனர் முருகதாசுடன்மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் விஜய். இதற்கு முன்பு துப்பாக்கி, கத்தி இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதால் மூன்றாவது படமும் வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
இதெலாம் ஒருபுறம் இருக்க என்னதான் விஜய் வெற்றிப்படங்களை கொடுத்தாலும் அவரது சினிமா வாழ்க்கையில் தோல்வியை தந்த டாப் ஐந்து திரைப்படங்கள் பற்றித்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.
5. புலி
இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான புலி திரைப்படம் விஜயின் சினிமா பாதையில் ஒரு தோல்விப்படம் என்றே கூறலாம்.
4. தலைவா
நாயகன் கதை அம்சம் கொண்ட தலைவா திரைப்படம் மிகப்பெரும் தடைகளுக்கு நடுவே வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு தலைவா திரைப்படம் ஒரு தோல்வி திரைப்படமாகவே அமைந்தது.
3. குருவி
இயக்குனர் தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசை அமைப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் குருவி. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்லும் குருவி என்ற கதையை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இதும் விஜயின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் தோல்விப்படம் என்றுதான் கூற வேண்டும்.
2. வில்லு
போக்கிரி வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம்தான் வில்லு. இந்த படமும் விஜயின் தோல்விப்படங்களில் முக்கியமான ஓன்று.
1. சுறா
விஜய் ரசிகர்களையே கடுப்பேற்றிய படமென்றால் அது சுறா படம்தான். விஜயின் 50வது படம் என்ற மாபெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. விஜயின் சினிமா பயணத்தில் சுறா படம் மாபெரும் தோல்வி படம் ஆகும்.