#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Varisu Audio Launch: ஆந்திராவில் விஜய்க்கு மாபெரும் பாராட்டு விழா?.. கண்ணசைவுக்காக இளைய தளபதி வெறியர்கள்..!
இன்று வாரிசு திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக பிரம்மிக்கவைக்கும் மேடை தயார் செய்யப்பட்டுள்ளன. விஐய் நடிப்பில், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் ஆவலுடன் எதிர்பார்க்கபடுகிறது. 2023 பொங்கலையொட்டி ஜனவரி 14ம் தேதி படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
வாரிசு திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகுவது முதலில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், அவை உயர்மட்டத்தில் பேசி சரி செய்யப்பட்டது. தமிழகத்தில் வாரிசு திரைப்பட விநியோக பணிகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு ஆந்திராவில் உள்ள மாசை காட்டுவதற்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இளையதளபதி விஜயிடம் பேசி அனுமதி வாங்கி தரும் பட்சத்தில் கட்டாயம் மாபெரும் மாநாடு மற்றும் பாராட்டு விழா நடத்தி வைப்போம். இனி தமிழகம் எங்குமே வாரிசு திருவிழாதான். அவரை தூரத்தில் இருந்து பார்க்கவே இங்கு வந்துள்ளோம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.