பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தக்காளி சாஸில் வந்த மோசமான நாற்றம்.! திறந்து பார்த்த பிரபல நடிகர் அதிர்ச்சி.! பரபரப்பு வீடியோ!!
தமிழில் அட்டக்கத்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபி சரவணன். தொடர்ந்து குட்டிபுலி, டூரிங் டாக்கீஸ், பட்டதாரி பிகில், கொம்பு வச்ச சிங்கம்டா, மாயநதி என பல படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துள்ள அவர் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றி கொண்டுள்ளார். அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு, குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளனர். இந்நிலையில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அங்கு வைக்கப்பட்ட தக்காளி சாஸில் இருந்து கெட்டுப்போன மோசமான வாசனை வந்துள்ளது. அவர்கள் சாஸ் பாட்டிலை திறந்து பார்த்தபோது உள்ளே புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்துள்ளதாம்.
Beware of hotel food #safety #food pic.twitter.com/hEfF46mpjW
— Vijay Vishwa (@VijayVishwaOffi) April 28, 2024
இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட அவர், தான் இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். உணவை சாப்பிட்டு தானும் குடும்பத்தினரும் வாந்தி எடுத்ததாக குறிப்பிட்ட அவர் உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் இது போன்ற விஷயங்களை கவனித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விஜய் விஷ்வா பகிர்ந்த வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.