#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி விஜய் கையில் இருக்கும் அந்த குழந்தை யாருடைய குழந்தை தெரியுமா?
நடிகர் விஜய் என்றாலே மாஸ்தான். பட்டிதொட்டி முழுவதும் நடிகர் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக நடிகர் விஜய்க்கு அதிக அளவில் சிறுவர்கள் ரசிகர்களாக உள்ளனர். விஜய் படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது.
இந்நிலையில் வரும் தீபாவளிக்கு சர்க்கார் திரைபடம் வெளிவர இருக்கிறது. படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைஉலகையும் தாண்டி பல்வேறு நிகழ்ச்சிகள், உதவிகள், பொது காரியங்கள் என அனைத்திலும் தன்னால் முடிந்தவரை தனது பங்களிப்பை செலுத்திவரும் நடிகர் விஜய் எப்போதும் தனது குடும்ப உறவினர்களுடன் நேரத்தை செலவிட தவறியதில்லை. சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது மகளுடன் வெளிநாட்டில் ஒரு உணவகத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகர் விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்து கொஞ்சி விளையாடுவது போல் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் குழந்தை யார் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அந்த குழந்தை நடிகர் விஜயின் நண்பர் சஞ்சீவின் உறவினற்குழந்தை என்பது தெரியவந்துள்ளது.
@actorvijay @Jagadishbliss @RIAZtheboss @GuRuThalaivaa @VijayRamboMaxim pic.twitter.com/38TeVtQsaP
— Bussy Anand (@BussyAnand) October 23, 2018