#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. வேற லெவல்தான்! குறைந்த நாட்களிலேயே இவ்வளவா! நடிகர் விஜய் தேவரகொண்டா படைத்த புதிய சாதனை!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக பெண் ரசிகைகள் எக்கச்சக்கம். நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்து மூன்றரை வருடங்களே ஆகும் நிலையில், குறைந்த காலத்திலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 13 மில்லியன் பெற்று தென்னிந்தியாவிலேயே அதிக ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட நடிகராக திகழ்ந்தார். ஆனால் அவரைவிட மிக குறைத்த நாட்களில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்று விஜய் தேவரகொண்டா அல்லு அர்ஜுன் இடத்தை சமன் செய்துள்ளார்.