#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உச்சகட்ட மகிழ்ச்சியில் சீயான் விக்ரம் குடும்பத்தார்கள்! என்ன விசேஷம் தெரியுமா? வெளியான சூப்பரான செய்தி!
தமிழ் சினிமாவில் ஏராளமான வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் சீயான் விக்ரம். சினிமாவிற்காக தனது உடலை வருத்தி மிக சிறப்பாக நடிப்பதில் இவருக்கு இணை இவரே. இந்நிலையில் நடிகர் விக்ரம்க்கு கடந்த 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அக்ஷிதா, துருவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களில் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். மேலும் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கு கடந்த 2017ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேரனான மனோரஞ்சித்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அக்ஷிதா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், என்றும் இளமையாக வலம் வரும் நடிகர் விக்ரம் விரைவில் தாத்தாவாக போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.