#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீடீர் விபத்து... பிரபல நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியான தாமிரபரணி, துப்பறிவாளன், மருது, சண்டைக்கோழி ஆகிய படங்கள் சூப்பர் ஹூட் அடித்தது மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை, வசூல் வேட்டையும் செய்தது.
அதன்பின் விஷால் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்தது. தற்போது விஷால் லத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் ரிலிசாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் லத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்துக்காக சென்னைக்கு அருகில் ஒரு கல் குவாரியில் சண்டைக் காட்சியைப் படமாக்கியுள்ளனர். அப்போது விஷாலுக்கு கால் மற்றும் கை ஆகிய பகுதிகளில் பலத்த அடி பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.