#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டம்மி பாவா.. "எல்லாமே பிராங்க் தான்" - நடுராத்திரியில் இளம்பெண்ணுடன் ஓடியது குறித்து நடிகர் விஷால் விளக்கம்.!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் ரத்தினம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் சமுத்திரகனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், ராமச்சந்திரா ராஜு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்ற விஷால் அங்கு இளம்பெண் ஒருவரின் தோள் மீது கை போட்டு ஊர் சுற்றிய வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.
Is that Actor @VishalKOfficial walking with someone in NYC 🤔 pic.twitter.com/ddMESEuKOq
— Ramesh Bala (@rameshlaus) December 26, 2023
தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஷால், "கிறிஸ்மஸ் தினத்தன்று உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவெடுத்து, அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோதான் அது" என்று கூறியுள்ளார். மேலும் தன்னுள் இருக்கும் குழந்தை தன்மையை வெளிக்கொண்டு வருவது நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதனால் தான் அப்படி செய்தேன் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் "டம்மி பாவா" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.