#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டிற்கு செல்லாமல்,ஹோட்டலிலேயே தங்கிய கேஜிஎப் நடிகர்! என்னாச்சு! ஏன் இந்த அதிரடி நடவடிக்கை?
2018-ம் ஆண்டு டிசம்பர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற கன்னட திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டானது. இப்படத்தின் மூலம் நடிகர் யஷ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாக கேஜிஎப் 2 தயாராகி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனைத்து படப்பிடிப்புகளும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் கேஜிஎப் 2 படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமானது. இதில் நடிகர் யஷ் பல சண்டைப்பயிற்சி கலைஞர்களுடன் உருண்டு சண்டை போடுவது, சேற்றில் விழுவது, மேலும் ஏராளமான கூட்டம்கூட்டமாக இருக்கும் காட்சிகளும் இருப்பதால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி அவர் வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டலிலேயே தங்கியுள்ளார்.
பின்னர் கொரோனா பரிசோதனை முடிந்து, தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதித்துள்ளார். மேலும் தனது படப்பிடிப்பில் கலந்துகொண்ட மற்ற நடிகர்களையும் ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு கட்டாயப் பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார்.