#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாடோடி பட நடிகை அனன்யாவா இது.! ஆள் அடையாளமே தெரியாமல் எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா!! பரவி வரும் ஷாக் புகைப்படம்.
xதமிழ்சினிமாவில் சசிகுமார் நடிப்பில் உருவான நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா. இப்படத்தில் துருதுருவென இருக்கும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே பெரும் அளவில் பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றார். அதனை தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.
அனன்யா தமிழில் சீடன், புலிவால், அதிதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாக உள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது அனன்யா மகரிஷி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழில் சுந்தர்சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை3 படத்திலும் அனன்யா நடிக்கின்றார். மேலும் கொழுகொழுவென இருக்கும் நடிகை அனன்யா தற்போது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இத்தகைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் நாடோடிகள் அனன்யாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.