மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அய்யோ.. உங்க மூளை இறங்கி முட்டிக்கு வந்துடுச்சா? - செய்தி எழுத்தாளரை கழுவி ஊற்றிய பிக்பாஸ் அபிராமி..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் அபிராமி. இவர் பல சின்னத்திரை தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றதாக தனியார் செய்தி ஊடகங்களின் வாயிலாக செய்திகள் வெளியிடப்பட்டன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "காரடையான் நோன்பிற்கும், தாலிக்கும் வித்தியாசம் தெரியாதா?, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? அய்யோ., நீங்கள் ஒவ்வொருநாளும் செய்வது தாங்க முடியாத அளவு உள்ளது. மீடியா துறையில் செய்தியை எழுதிய நபர்கள் எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்று தெரியவில்லை.
நாளுக்கு நாள் செய்தி எழுதுவதால் உங்களின் மூளை இறங்கி முட்டிக்கு வந்துவிட்டதா?. காரடையான் நோன்புக்கும், தாலி சரடுக்கும் வித்தியாசம் கூட தெரியாத நீங்க எல்லாம் எப்படி செய்தி எழுதுகிறீர்கள்?. எனது அம்மாவிடம் இது குறித்து தெரிவித்தால் அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்" என்று கோபத்துடன் பேசியுள்ளார்.
Note : Title and Inside Images Snipped From Abirami's Instagram Account