பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆசை நண்பரை உற்சாகத்துடன் கரம்பிடித்த நடிகை அமலா பால்; இரண்டாவது வாழ்க்கை கொண்டாட்டத்துடன் தொடக்கம்.!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை அமலா பால் சிந்துசமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வத்திருமகள், ராட்சசன், பசங்க 2, தலைவா, ஆடை, நிமிர்ந்து நில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்துகொண்ட நிலையில், 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, சில திரைப்படங்களில் நடித்த நடிகை, தனது நண்பர் ஜெகத் தேசாயுடன் ஊர்சுற்றி வந்தார்.
இதற்கிடையில், சமீபத்தில் நடிகை அமலா பாலின் பிறந்தநாள் அன்று, ஜெகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்த, அதற்கு அமலா பாலும் சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், கொச்சியில் வைத்து தனது காதலர் ஜெகத் தேசாயை நடிகை அமலாபால் உறவினர்கள் முன்னிலையில் கரம்பிடித்தார். புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இரண்டாவது திருமணம் செய்துள்ள நடிகை அமலா பால் வாழ்க்கை அடுத்தகட்டத்தை நோக்கி வெற்றிகரமாக, திரைத்துறையினர் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.