#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அசின்! குவிந்து வரும் வாழ்த்துக்கள்!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின். எம் குமரன் சன் ஆப் மகாலஷ்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அசினுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
ஒருவழியாக முட்டி மோதி பின்னர் AR முருகதாஸ் இயக்கத்தில் கஜினி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கஜினி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற நடிகை அசினும் ஒரு காரணம். அந்த அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பாக அமைந்தது. கஜினி படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
பின்னர் நடிகர் விஜயுடன் சிவகாசி படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பின்னர் தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட் பக்கம் சென்றார் அசின்.
பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் அசின். திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பெண்பின் குழந்தை பிறந்தது. இதுவரை தனது மகளின் புகைப்படத்தை எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் அசின் பதிவிட்டதில்லை.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 25)நடிகை அசின் மகள் அரின் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடினார். தனது மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை அசின் முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.