#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சமையல்காரர் சொன்ன விஷயத்தை கேட்டு ஷாக்கான மீசையை முறுக்கு பட நடிகை ஆத்மிகா... அப்பிடி என்ன சொல்லிருப்பார்.!?
தமிழ் திரைப்பட நடிகையும், மாடலுமான ஆத்மிகா முதன் முதலில், சர்வம் தாளமயம், மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், பம்பாய் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜிவ் மேனன் என்ற இயக்குநரின் குறுப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதன் பின் ஹிப் ஹாப் ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திந்தார்.
மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காட்டேரி, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, நரகாசூரன் போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்களில் இவரின் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்க்கென்று தனி இடத்தை பிடித்தார்.
இதுபோன்ற நிலையில், ஆத்மிகா ஒரு பேட்டியில் மீசையை முறுக்கு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "மீசையை முறுக்கு படத்தின் இசையமைப்பாளர் என்னை தொடர்பு கொண்டு படத்தின் ஆடிஷனுக்கு வர சொன்னார். நான் பாடுவதற்கு தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். ஹிப் ஹாப் ஆதியுடன் தான் நடிக்க போகிறேன் என்று ஆடிஷன் முடியும் வரையில் எனக்கு தெரியாது.
இதன்பின், ஆடிஷன் முடிந்து அறையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது அங்கிருக்கும் சமையல்கார பெண் ஒருவர் தான் என்னை தான் மீசையய் முறுக்கு படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறினார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகும் என்னால் அதை நம்ப முடியவில்லை மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணம்" என்று பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.