பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இப்போதைக்கு கொஞ்சமா பிரேக் வேணும்., திருப்பி அடிப்போம் - பட தோல்வியால் சிம்பு பட நடிகை அதிரடி முடிவு..!
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுடன் இணைந்து "காதல் அழிவதில்லை" என்ற படத்தில் நடித்தவர் சார்மி கவுர். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்த இவர் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
இது குறித்த அவரது ட்வீட்டில், அவர் தான் விலகுவது குறித்து பேசியதுடன் இயக்குனர் பூரி ஜெகநாத் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். நடிகை சார்மி கவுர், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் லைகர். இப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில், இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ள பலமொழிகளிலும் திரைக்கு வந்தது.
இந்நிலையில் நடிகையும் பூரி கனெக்ட் தயாரிப்பு நிறுவன அங்கத்தவருமான சார்மி வெளியிட்ட பதிவில், "சமூகவலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொள்ளப்போகிறேன். பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் திருப்பி அடிக்கும். பெரிதாகவும், சிறப்பாகவும்.. அதுவரை வாழுங்கள்..வாழ விடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.