#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாரை காப்பாற்ற இந்த அவசர கைது! விசாரணைக்கு பிறகு நடிகை சித்ராவின் மாமனார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து போலீசார் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஹேமந்த் தூண்டுதலால்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் இன்று நடிகை சித்ராவின் மாமானார், மாமியாரிடம் 4 மணி நேரமாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் என் மகனை கைது செய்து விட்டார்கள். யாரை காப்பாற்றுவதற்காக இந்த கைது நடைபெற்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் சித்ரா குடும்பத்தினரிடம் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. இன்று ஆர்டிஓவிடம் எங்கள் தரப்பு நியாயத்தை கூறினோம். எனது மகன் விசாரணையில் கலந்து கொண்டு அவர் தரப்பு நியாயத்தை கூறியிருக்க வேண்டும். அதற்குள் கைது செய்து விட்டனர். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை யாரை காப்பாற்றுவதற்காக இந்த கைது சம்பவம் நடந்தது என்று புரியவில்லை என கூறியுள்ளார்.