#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.!! தேவயானியா இது? முடியெல்லாம் நரைத்து வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம்..! இதுதான் காரணமா?
நடிகை தேவயானி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவயானி. பெங்காலி திரைப்படம் சினிமாவில் அறிமுகமான இவர், தொட்டால் சிணுங்கி என்ற தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைப்பின்னர் கல்லூரி வாசல் என்ற படத்தில் நடித்த அவர், அஜித்துக்கு ஜோடியாக காதல் கோட்டை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபாலமானார்.
அன்றில் இருந்து இன்றுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார் தேவயானி. மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் கலக்கிவந்த இவர், தற்போது குடும்பம், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
இருப்பினும் தற்போது மீண்டும் சீரியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ள இவர், மதகஜ என்ற கன்னட படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக வயதான தோற்றத்தில், தலைமுடியெல்லாம் நறைத்தவாறு இருக்கும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.