#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொள்ளை அழகு.! புடவையில் அம்மாவையே மிஞ்சிட்டாரே.! இணையத்தை கலக்கும் நடிகை தேவயானி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான காதல் கோட்டை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தேவயானி. அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் விஜய், பிரபு, சத்யராஜ்,சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
90'ஸ் காலகட்டங்களில் டாப் ஹீரோயினாக, இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து கரம்பிடித்தார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். மேலும் தேவயானி தற்போதும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் அண்மையில் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை தேவயானியின் மகளது புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் வெள்ளை நிற பட்டுப்புடவையில் கொள்ளை அழகில் அச்சு அசல் தனது அம்மாவைப் போலவே உள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.