#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை தேவயானியின் இரு மகள்களை பார்த்துருக்கீங்களா! அச்சு அசல் அம்மாவை மாதிரியே இருக்காங்களே!!
தமிழ் சினிமாவில் காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தேவயானி. அதனை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்த அவர் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.
நடிகை தேவயானி தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.
மேலும் நடிகை தேவயானி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தேவயானி தனது இரு மகள்களுடன் கிராமத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் தேவயானி மகள்கள் பார்ப்பதற்கு அச்சு அசல் அவரைப் போலவே இருப்பதாக கூறிவருகின்றனர்.