பாவம் அந்த நேசமணி! நடிகை தன்ஷிகா என்ன செய்துள்ளார் பாருங்கள்



actress-dhansika-published-video-about-neasamani

இந்திய அளவில் நேற்று முதல் இன்று வரை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் ஹேஷ் டாக் '#pray_for_Neasamani' யை சிதாதரிக்கும் விதமாக நடிகை தன்ஷிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பேராண்மை, அரவாண், பரதேசி, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. கடந்த வருடம் வெளியான காலக்கூத்து படத்தினை தொடர்ந்து தற்போது கிட்னா, யோகிடா, இருட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Pray_for_Neasamani

தற்போது சமூக வலைதளங்களில் ப்ரெண்ட்ஸ் படத்திலிருந்து வடிவேலுவின் சுத்தியல் காமெடி இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சிறிய தீயாய் பற்றிய '#pray_for_Neasamani' என்ற ஹேஷ் டேக் தற்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது. சாதாரண நெட்டிசன்கள் துவங்கி திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இதில் ட்வீட் செய்து வருகின்றனர்.

Pray_for_Neasamani

இந்நிலையில் நடிகை தன்ஷிகாவும் தனது பங்கிற்கு வடிவேலு காமெடிக்கு டிக்-டாக்கில் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். வடிவேலு போல செய்கை செய்த அந்த வீடியோவை நடிகை தன்ஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் '#pray_for_Neasamani' என்ற ஹேஷ் டேக்கில் பகிர்ந்துள்ளார்.