பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கேன்சரால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?
சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நான் ஈ படத்தில் நடித்த ஹம்சா நந்தினி ஒரு வருடத்திற்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்து தலையில் முடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை இருந்து வந்தார் ஹம்சா நந்தினி.
இந்நிலையில் நந்தினியின் தற்போதைய நிலை குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கேன்சர் நோயிலிருந்து மீண்ட நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வருடத்திற்கு முன் தலையில் சுத்தமாக முடி இல்லாத போட்டோ மற்றும் தற்போது முடி நன்றாக வளர்ந்திருக்கும் போட்டோகளை பதிவிட்டு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.