#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்தாரா ஹன்சிகா?..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!!
கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களால் வரவேற்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பருமனான உடல் அமைப்புடன் இருந்த நடிகை தற்போது ஒல்லியாக இருக்க முடிவு செய்து கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையும் குறைத்து இருந்தார். அவருக்கு சமீபத்தில் திருமணமும் நடைபெற்று முடிந்து கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலமாக உடல் நிலையை குறைத்துவிட்டு, யோகாவால் உடலமைப்பு மாறியது போல கூறுகிறீர்களே என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள ஹன்சிகா, "நான் எனது தோற்றத்திற்காக நிறைய உழைக்க வேண்டியிருந்தது. யோகாவும் அதற்கு காரணம். யோகா நேர்மறை எண்ணத்தை பரப்புவதோடு, வெறுப்பை குறைக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.