#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எலும்பும் தோலுமாக மாறிய ஹன்ஷிகா! லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து வருத்தப்படும் ரசிகர்கள்!
எலும்பும் தோலுமாக மாறியுள்ள நடிகை ஹன்ஷிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர் நடிகை ஹன்ஷிகா. நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை அடுத்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். வேலாயுதம், ரோமியோ ஜூலியட், அரண்மனை, அரண்மனை 2 ஆகிய வெற்றிப்படங்கள் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படங்களாகும்.
இப்படி தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் இவர், தற்போது புது முக நடிகைகளின் வரவால் சற்று ஓரம் கட்டப்பட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவரது உடல் எடையும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருவதை குறைக்க தொடங்கியது. பலரும் ஹன்ஷிகாவின் தாறுமாறான உடல் எடையை பார்த்து கலாய்க்க தொடங்கினர்.
இந்நிலையில்தான் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார் ஹன்ஷிகா. தற்போது இவரது உடல் எடையை பார்க்கும் ரசிகர்கள் உடல் எடையை குறைக்க வேண்டியதுதான், ஆனால் அதற்காக இப்படி எலும்பும் தோலுமாகவா மாறுவது என மீண்டும் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
மேலும் சிலர், நீங்கள் சற்று குண்டாக, கொளுக்கு மொலுக்குனு இருந்தால்தான் பார்க்க நன்றாக இருப்பீர்கள், இந்த அளவிற்கு உடலை எடையை குறைக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறிவருகின்றனர்.