பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அவர் சொன்னால் உடனே திருமணம் செய்துகொள்ள தயார்! நடிகை ஹன்ஷிகா!
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார். இவர் சினிமா துறையையும் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தமிழில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிளை படத்தில் அறிமுகமான இவர் பின்னர் வேலாயுதம், ரோமியோ ஜூலியட், எங்கேயும் காதல், போகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஹன்ஷிகா.
“இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். சென்ற வருடம் 18 வாய்ப்புகள் வந்தது, அதில் 4 மட்டுமே ஒப்புக்கொண்டேன்” என ஹன்சிகா கூறினார்.
மேலும் திருமணம் பற்றி பேசிய அவர் “எனக்கு 27 வயதாகிறது. என் அம்மா தான் அனைத்தையும் கவனித்து கொள்கிறார். என் திருமணம் பற்றிய முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன். என அம்மா சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்” என திரிவித்துள்ளார்.