#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! பிரபல நடிகைக்கு டும்..டும்..டும்.! மாப்பிளை யார் தெரியுமா?
தமிழில் சித்து பிளஸ்2 என்ற படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இதனை தொடர்ந்து அவர் வில் அம்பு, கட்டப்பாவ காணோம், ராஜா ரங்கூஸ்கி, மன்னர் வகையறா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்சமயம் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாந்தினியும், வில் அம்பு, இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தநந்தாவும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல்விஷயம் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டுள்ளனர். பின் அதனை தொடர்ந்து வருகிற 12ஆம் தேதி அவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளது. இதில் , நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 16ம் தேதி மாலை 6 மணியளவில், சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.