பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எதை தோழி டிஸ்டர்ப் பண்ணக்கூடாது?.. இலியானாவின் ஒரேயொரு போட்டோவால் பதறிப்போன ரசிகர்கள்.!
இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை இலியானா டி க்ரூஸ். இவர் கடந்த 2006 ஆம் வருடம் தெலுங்கு மொழியில் வெளியான தேவதாஸ் திரைப்படத்தில் நடித்து பெரிதளவு அறியப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, தெலுங்கில் போக்கிரி, ஜல்சா, கிக், ஜூலாயி போன்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழில், கடந்த 2006 ஆம் வருடம் வெளியான கேடி படத்திற்கு பின்னர், கடந்த 2012 ஆம் வருடம் நண்பன் படத்தில் நடித்தார்.
ஹிந்தியில் மெயின் தேரா ஹீரோ, ரெய்டு போன்ற படத்திலும் நடித்துள்ளார். மும்பையை சார்ந்த இலியானாவின் குடும்பம், பின்னாளில் கோவாவுக்கு குடிபெயர்ந்தது. இலியானா தனது சிறுவயதை கோவாவிலேயே கழித்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவான நடிகையாக இருந்து வரும் இலியானா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் அவர் பதிவேற்றியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த புகைப்படத்தை போல பதிவிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில், Do Not Disturb என்ற வாசகம் அடங்கிய தொப்பியை பதிவிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்களோ அதற்கு எதுகை மோனையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.