#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரபல நடிகைக்கு இப்படியொரு கஷ்டமா? வெளியான ஷாக் தகவல்!
தமிழ் சினிமாவில் ஒய் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம்அறிமுகமானவர் நடிகை இஷா ரெப்பா. அவர் தற்போது ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் ரிலீசாவது தள்ளிப்போய் கொண்டுள்ளது.
மேலும் ஊரடங்கு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வீட்டில் முடங்கி இருந்த நிலையில், நடிகை இஷா ரெப்பா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவரது டுவிட்டர் கணக்கு திடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு ஜெயம்ரவி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, வித்யுலேகா, அனுபமா பரமேஸ்வரன், பூஜா ஹெக்டே ஆகியோரது சமூக வலைதளபக்கங்கள் முடக்கப்பட்டு பின்னர் தொழில் நுட்ப குழுவினர் உதவியால் அவை மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.