#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன்டிவி நடிகையின் வீட்டில் பால்குடித்த அம்மன்.. நேரில் பார்த்த வியந்து போன நிகழ்வு குறித்து அவர் என்ன சொன்னார் தெரியுமா?.!!
எளிமையான குடும்பத்தில் பிறந்து ஏழ்மை காரணமாக படிப்பை நிறுத்தி, திரை ஆர்வத்தில் முதன்முதலாக முத்துக்கு முத்தாக திரைப்படத்தில் நடித்த நடிகை ஜானகி தேவி. அதை தொடர்ந்து இவர் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்துள்ளார். தனது சிறு வயது முதலாகவே ஆன்மீகம் மீது நம்பிக்கை கொண்ட இவர், 18ஆம் படி கருப்புசாமி கோவிலுக்கு செல்வது வழக்கம்.
இப்படியாக ஒருமுறை இவர் கருப்புசாமி கோவிலுக்கு சென்று வரும்போது, ஒருவர் நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுத்து நீங்கள் நினைத்தது நடக்கும் என்று கூறியுள்ளார். அதற்குபின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில், "கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது அனைவரும் என்னை பார்த்து என்ன பரிசு வேண்டும்? என்று கேட்டார்கள். அப்போது எந்த ஞாபகத்தில் இருந்து கூறினேன் என்று தெரியவில்லை. ஆனால் வராகியம்மன் சிலை வேண்டும் என்று கூறினேன்.
அதன் பின்னர்தான் வராகியம்மனின் மீது ஆர்வம் வந்தது. அவரின் சிலையை வாங்கி வந்து எனது வீட்டிலும் வைத்தேன். பஞ்சமி நாளில் வராகியம்மனை வழிபட்டு வந்தேன். ஒருநாள் இரவு திடீரென எனது மகளை அழைத்து அம்மனுக்கு பாலை ஸ்பூனில் கொடுக்க சொன்னபோது, அம்மன் சிலை குழந்தை போல பாலை குடித்தது" என்று தெரிவித்தார்.