வீட்டை விட்டு வெளியேறியதும் ஜனனி வைத்துள்ள மாஸ்டர் பிளான்! உண்மையை உடைத்த சகோதரி!



Actress jananis master plan after bigg boss

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர்தான் பிக் பாஸ் சீசன் ஒன்னு. சீசன் ஒன்னு வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன் இரண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு சீசன் இரண்டு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்துவிட்டது. இதில் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் சிலர் இரண்டாம் வாரம் முதல் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர்.

ACtress janani iyer

இந்த வாரம் வைஷ்ணவி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இப்போது வரை நிஜமாக இருந்து பலருக்கும் பிடித்தவராக இருப்பவர் ஜனனி ஐயர்.

சில படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர். எப்படியும் அவர் இறுதி வரை சென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் வெளிநாடு சுற்றுலா தானாம். தன் தங்கையுடன் அவர் செல்ல முடிவெடுத்துள்ளதாக அவரின் தங்கையே கூறியுள்ளார்.