#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜோதிகா போட்ட பந்துல டக் அவுட் ஆன விஜய்! ஏதாவது உள்குத்து இருக்குமோ?
தற்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக் சர்க்கார் மற்றும் தளபதி விஜய் தான். இந்நிலையில் நடிகை ஜோதிகா கூறியிருப்பது விஜய்க்கு எதிராக மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என்ற படத்தில் நடித்துவருகிறார் நடிகை ஜோதிகா.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்த நடிகை ஜோதிகா சினிமாவில் பெண்களை மட்டும்தான் ஜோக்கர் போல் காட்டுகிறார்கள், ஆண்களை புத்திசாலிகளாக காட்டுகிறார்கள்! என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். கூடவே தனக்கு வரும் புதுப்படங்களின் கதையை தானும், சூர்யாவும் சேர்ந்து கேட்டுவிட்டு கலந்து பேசி முடிவெடுப்போம்! என்று கூறியுள்ளவர், இருந்தாலும் இறுதி முடிவு தன்னுடையதுதான் என்றும் சமாளித்திருக்கிறார்.
மேலும் , ‘ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் உங்களுக்கு சவுகரியமாக இருந்த நடிகர் யார்?’ என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை ஜோதிகா “சூர்யா, அஜித், மாதவன், விதார்த்! ஆகியோர் எனக்கு சவுகரியமாக இருந்தனர்!’ என்று கூறியுள்ளார். ஆனால் அவர் குஷி என்றபடத்தில் தளபதி விஜயுடன் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜயின் பெயரை குறிப்பிடாதது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.