விரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்? வெளியான சூப்பர் தகவல்!



Actress lakshmi menon marriage news leaked

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன்.  அதேபோல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் இவரது முதல் திரைப்படம் என்றே கூறலாம். 

இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை லட்சுமிமேனன்.  

அதனைத் தொடர்ந்து குட்டிபுலி, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை என பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகை லட்சுமி மேனன். 

அதன் பின்னர் தல அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து, நடிப்பில் அசத்தியிருந்தார் நடிகை லட்சுமி மேனன்.  அதை தொடர்ந்து உடல் எடை சற்று கூடிய நடிகை லட்சுமி மேனன் புதுமுக நடிகைகளின் வரவால் பட வாய்ப்பு இன்றி மீண்டும் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுவிட்டார். 

Lakshmi menon

தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவரிடம் படங்கள் கைவசம் இல்லாவிட்டாலும் பிரபுதேவாவுடன் யங் மங் ஜங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நடிகை லட்சுமிமேனனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு லட்சுமிமேனன் தனது உடல் எடையை குறைத்து உள்ளதால் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டுவாரா? அல்லது திருமணம் செய்து கொள்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.