பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
50 ஆண்டு சாதனை.! பிரபல நடிகை லதாவிற்கு கிடைத்த கவுரவம்.! அட.. என்னனு பார்த்தீங்களா!!
சினிமா உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதித்தவர்களை கௌரவிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் பத்து ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.
இவ்வாறு ஏற்கனவே தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என திரைத்துறையில் பிரபலங்களாக இருக்கும் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், விஜய்சேதுபதி, பார்த்திபன், நாசர், ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால்,மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான் மற்றும் நடிகைகள் மீனா, திரிஷா, பாவனா, காஜல் அகர்வால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான லதாவிற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. நடிகை லதா வெள்ளித்திரையில் பல பழம்பெரும் நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும் தற்போது சின்னத்திரை தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரையுலகில் அவரது 50 ஆண்டு சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.