வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
"நடு ராத்திரியில் என்னை எழுப்பி இதை செய்ய சொல்வார்!" கணவர் குறித்து மகாலக்ஷ்மி வேதனை!
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர் மஹாலக்ஷ்மி. இவர் தொடர்களில் பெரும்பாலும் எதிர்மறையான கேரக்டர்களில் தான் நடித்து வருகிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.
இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தற்போது வரை பலரின் கேலிக்கும், எதிர்மறை கருத்துக்கும் ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மஹாலக்ஷ்மி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு முதல் கணவருக்குப் பிறந்த ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தன் கணவர் ரவீந்தருடன் இருக்கும் புகைப்படங்களை வெளிட்டு வருகிறார் மஹாலக்ஷ்மி.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், "ரவீந்தரின் உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தோம். ஆனால் அவர் சரியாக டயட்டை கடைபிடிக்க மாட்டார். என்னையும் நடு ராத்திரியில் எழுப்பி சாப்பிட சொல்லுவார். என்னையும் டயட்டை கடைபிடிக்க விட மாட்டார்" என்று மஹாலக்ஷ்மி கூறியுள்ளார்.