#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர்ஹிட் பாடலுக்கு பிரபல விஜய் பட நடிகையுடன் செம ஆட்டம் போட்ட நடிகை மீனா.! வைரலாகும் கியூட்டான வீடியோ!!
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இளைஞர்களின் கனவு நாயகியாக, டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் மீனா. அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். நடிகை மீனா தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்.அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் மறைவால் மீளா துயரத்தில் இருந்த நடிகை மீனா தற்போதுதான் மெல்ல மெல்ல அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வதந்திகளும் பரவியது.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள், தனது வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த சங்கவி மீனாவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது இருவரும் செம ஹிட்டான மாலை டம்டம் மங்கல டம்டம் பாடலுக்கு க்யூட்டாக ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை மீனா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.