#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேக்னா குடும்பத்தை விடாமல் துரத்தும் துயரம்! பச்சிளங்குழந்தைக்கு கூடவா! வெளியான ஷாக் தகவல்! கவலையில் ரசிகர்கள்!
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தனது 35 வயதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமடைந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா. அவர் கணவர் இறந்த போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
மேக்னா தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நடிகை மேக்னா ராஜ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில், என் தந்தை, அம்மா, நான் மற்றும் என் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களை தொடர்பு கொண்டவர்களிடம் இந்த முடிவு பற்றி தெரிவித்துள்ளோம். நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். குட்டி சிருவும் நலமாக உள்ளார். கவலைபட வேண்டாம். ஒரு குடும்பமாக இந்த போரில் போராடி வெற்றியுடன் வெளியே வருவோம் என கூறியுள்ளார்.