"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
கோடிக்கணக்கில் சம்பளம்.! சீதாராமம் பட நாயகியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா??
கடந்த 2014 ஆம் ஆண்டு மராட்டிய சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹிந்தியில் love sonia என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து ஏராளமான படங்களிலும், தொடர்களிலும் நடித்த அவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது எதார்த்தமான, க்யூட்டான நடிப்பு பலரையும் கவர்ந்தது.
மேலும் அவருக்கென பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கில் நடிகர் நானியுடன் இணைந்து ஹாய் நானா, விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் மற்றும் ஹிந்தியில் பூஜா மேரி ஜான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி நடிகை மிருணாள் தாக்கூர் தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஹாய் நானா படத்தில் நடிக்க வாங்கிய சுமார் ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறுகிய காலத்திலேயே உச்சத்திற்கு வந்து கியூட் மற்றும் ஹாட் ஹீரோயினாக வலம் வரும் மிருணாள் தாக்கூரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது அவரது சொத்து மதிப்பு ரூ.33 கோடி மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.