#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதம் மாறி திருமணம் செய்துகொண்ட நடிகை மோனிகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில், முன்னணி கதாநாயகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அதனை தொடர்ந்து அவர் பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை மோனிகா காதல் அழிவதில்லை, பகவதி, பந்தா பரமசிவம், சண்டக்கோழி, தாஸ், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி, சிலந்தி, அ,ஆ,இ,ஈ, ஜன்னல் ஓரம் என ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் அவர் தனது பெயரை எம் ஜி ரஹீமா என மாற்றிக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் வெளியில் செல்லும்போது ரசிகர்கள் மத்தியில் சிரமமாக இருப்பதாக கூறி பர்தா அணியதொடங்கினார்.
பின்னர் நடிகை மோனிகா கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா துறையிலிருந்து முழுவதும் தன்னை விலக்கிக் கொண்டார். இந்நிலையில் அவரை திருமணம் செய்துகொள்ளத்தான் மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் அவரது தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .