பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அச்சச்சோ.. என்னாச்சு நடிகை மௌனி ராய்க்கு?... எலும்பும் தோலுமாக அவரே வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பாலிவுட்டில் "நாகினி" என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மௌனி ராய். இந்த நாகினி தொடர் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழிலும் இவருக்கென தனிரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாருடன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தம்பதிகள் இருவரும் பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்று தங்களது காதலை வளர்த்து வருகின்றனர்.
நடிகை மௌனி ராய் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். திருமணமானாலும் அதற்கு எவ்வித குறையும் வைக்காமல் இவர் ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் என்னாச்சு மௌனிராய்? ஏன் எலும்பும் தோலுமாக இருக்கிறீர்கள்? என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.